டிரான்ஸ்ரேடியல் இண்டர்வென்ஷன்
கரோனரி மற்றும் புற ஆஞ்சியோகிராம் செய்வதற்கான ஒரு பயனுள்ள, குறைந்த அளவு துளையிட்டு மேற்கொள்ளும் பரிசோதனையே டிரான்ஸ்ரேடியல் நுட்பம் ஆகும்.
டிரான்ஸ்ராடியல் இன்டெர்வென்ஷன் (TRI) என்பது மணிக்கட்டை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு தோல்வழி ஊசித்துளை கரோனரி இன்டெர்வென்ஷன் முறையாகும் (PCI). மணிக்கட்டில் இருக்கும் ரேடியல் தமனி வழியாக வடிகுழாய் செலுத்தப்பட்டு, கரோனரி தமனியில் குறுகிய அல்லது அடைப்பிருக்கும் இரத்த நாளங்கள் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. டாக்டர் செங்கோட்டுவேலு இந்தியாவில் ரேடியல் அணுகுமுறையின் முன்னோடி ஆவார்.
2003இல் இந்த அணுகுமுறையை மேற்கொண்ட மிகச்சிலரில் இவரும் ஒருவர். இச்சிகிச்சை முறையில் நோயாளிகளுக்கு குறைந்த வலி, குறைந்த இரத்தப்போக்கு ஏற்படுவதுடன் குறுகிய காலத்திலேயே சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றுவிடலாம்.
இதற்கு மாறாக, டிரான்ஸ்ஃபெமரல் இன்டெர்வென்ஷன் (TFI) அதாவது மேல்காலில் உள்ள தமனி வழியாக வடிகுழாய்கள் செலுத்தப்படலாம். கடந்த காலத்தில் இத்தகைய TFI நடைமுறைகள் வழக்கமான சிகிச்சைமுறையாக இருந்தது.
பலூன் வடிகுழாய்கள் மற்றும் ஸ்டெண்டுகளின் ஆகியவற்றின் தொடர்ச்சியான வளர்ச்சி மருத்துவர்களுக்கு மணிகட்டில் இருக்கும் சிறிய இரத்த நாளங்களின் வழியாக பிரச்சினை இருக்கும் பகுதியை அணுக உதவி புரிந்துள்ளது. TFI உடன் ஒப்பிடும்போது, TRI நோயாளிகளுக்கு மன, உடல் மற்றும் பொருளாதார சுமைகளை குறைப்பதால் இந்நடைமுறை இப்போது அதிகப் பயன்பாட்டில் இருக்கிறது.
மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை
டாக்டர் ஜீ எஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.
ஜீ .எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666
அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641