Select Page

மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு

 

மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு அவர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூத்த ஆலோசகர் மற்றும் தலைமை இருதய நோய் சிகிச்சை நிபுணராகப் பணிபுரிந்துவருகிறார். மிகவும் சவாலான பிசிஐ மற்றும் ஸ்டெண்டிங் சிகிச்சையை கையாள்வதில் கைதேர்ந்தவரான இவர் தோல்வழி இதய வால்வு மாற்று மற்றும் அறுவை சிகிச்சையிலும் (TAVI/TAVR, mitraclip போன்றவை) அனுபவமிக்கவர். இவர் தற்போது சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள டாக்டர் ஜி.எஸ். இதய மருத்துவமனையிலும் (Dr G.S. Heart Clinic) ஆலோசனை வழங்கிவருகிறார்.

மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளுக்காக புகழ்பெற்ற Eurointervention, Journal of the American College of Cardiology, Indian Heart Journal, Heart, Lung and Circulation – Journal, Asia Intervention, Cath Lab Digest, International Journal of Cardiology போன்ற மருத்துவ சஞ்சிகைளில் மருத்துவம் சார்ந்த மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

புகழ்பெற்ற மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற இவர் அதனை தொடர்ந்து மணிபாலில் அமைந்த்துள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் Internal Medicine பட்டத்தையும், அதன் பின் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் இருதயவியல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.

மேலும் ஃப்ரான்ஸ் கல்வி நிறுவனமான கார்டியோவாஸ்குலேர் பாரிஸ் சுட்டில் உலக புகழ்பெற்ற மருத்துவரான மேரி கிளாட் மோரிஸ் மேற்பார்வையில் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி ஃபெலோஷிப்பை மேற்கொண்டார்.
சிக்கலான கரோனரி ஸ்டென்டிங் மற்றும் கட்டமைப்பு இதய வால்வு சிகிச்சைகளில் தனது பங்களிப்புக்காக அங்கீகாரம் பெற்றுள்ளவர். கேத்லாபில் 15,000க்கும் மேற்பட்ட முறை சிகிச்சை செய்துள்ளார்.

நிபுணத்துவம் பெற்றுள்ள சிகிச்சை முறைகள்

மருத்துவர் ஜி செங்கோட்டுவேலு, இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி சிகிச்சை முறையில், குறிப்பாக பெரியவர்களுக்கான இதயச் சுவர் வழி மற்றும் வால்வு வழி சிகிச்சையில் அதிக நிபுணத்துவம் பெற்றவர். வால்வு வழி சிகிச்சைகளில் ட்ரான்ஸ்கதீட்டர் பெருநாடி வால்வு மாற்று சிகிச்சை, ட்ரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு மாற்று சிகிச்சை, ட்ரான்ஸ்கதீட்டர் நுரையீரல் வால்வு மாற்று சிகிச்சை, ட்ரான்ஸ்கதீட்டர் முக்கூர் வால்வு மாற்று சிகிச்சை ஆகியவை அடங்கும்.

மேலும் மணிக்கட்டு தோல்வழி இரத்தக் குழாய் பரிசோதனை, சிக்கலான குருதிக்குழாய்ச் சீரமைப்பு மற்றும் ஸ்டெண்ட் அமைப்பு, குறைந்தபட்ச துளையிடுதலுடன் செய்யப்படும் பரிசோதனை, சிகிச்சைகள், மாரடைப்புக்கான ஆஞ்சியோப்ளாஸ்டி, பைபாஸுக்கு பிறகான ஆஞ்சியோ, Flextrome Distal Protection Systems, Drug Eluting Balloons (DEB), Atherectomy, Rotablation, Optical Coherence Tomography (OCT) imaging, Bioresorbable Vascular Scaffold (BVS), Intravascular Ultrasound (IVUS) Fractional Flow Reserve (FFR) உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சிகிச்சை.

ஆசிரியராக

இந்தியாவில் முன்னணி இருதய நோய் சிகிச்சை நிபுணராகவும், TAVR, குறுகிய தமனிக்கான சிகிச்சை, ஆப்டிக்ராஸ் இண்ட்ராவாஸ்குலர் அல்ட்ராசவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றில் முன்னோடியாகவும், பல நூறு சிகிச்சைகளை செய்து முடித்திருக்கும் மருத்துவர் செங்கோட்டுவேலு, கற்பித்தலிலும் ஈடுபட்டுள்ளார். இத்தனை வருடங்களாக அவர் பெற்ற அனுபவமும், நிபுணத்துவமும், அடுத்த தலைமுறைக்குச் செல்ல வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்.

படிப்பு மற்றும் வேலை அனுபவம்

மருத்துவர் செங்கோட்டுவேலு, ஃப்ரான்ஸ் கல்வி நிறுவனமான கார்டியோவாஸ்குலேர் பாரிஸ் சுட்டில் உலக புகழ்பெற்ற மருத்துவரான மேரி கிளாட் மோரிஸ் மேற்பார்வையில் தனது ஃபெலோஷிப்பை மேற்கொண்டார். மேற்கொண்டு மருத்துவர் தீரி லொவெர் மற்றும் மருத்துவர் யெவி லுவார்ட் ஆகியோரின் கீழ் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதுவரை 12,000 அறுவை சிகிச்சைகளுக்கு மேல் செய்துள்ள இவர் அதில் 10,000 முறைகள் ரேடியல் வழியாகவும், 2000த்துக்கும் அதிகமானவை ட்ரான்ஸ்ரேடியல் முறைகளிலும் செய்துள்ளார். தனது முக்கியமான மருத்துவப் பணியைத் தாண்டி, பல வருடங்கள் ஆசிரியராகவும் அனுபவம் பெற்றுள்ளார். பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளில் இயங்கி வருகிறார்.

விருதுகள், சாதனைகள்

ஒரு நல்ல மருத்துவர் நோய்க்கு சிகிச்சை அளிப்பார். ஒரு சிறந்த மருத்துவர் நோய் இருக்கும் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பார். தனது பணியை மருத்துவர் ஜி செங்கோட்டுவேலு அணுகும் விதமும், அவர் பணி புரியும் விதமும், கூடுதலாக முயற்சி செய்ய தயாராக இருக்கும் அவரது குணமும் அவருக்கு பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளன. சாதனைகளை படைக்க உதவியுள்ளன. பாரத ரத்னா ராஜீவ் காந்தி விருது, சிறந்த மருத்துவர் விருது, போது தர்மர் விருது, சிக்கலான இருதய சிகிச்சையில் சிறந்து விளங்குவதற்கான ஜப்பானிய விருது, அற்புதமான சேவை விருது ஆகியவை இவர் பெற்றுள்ள விருதுகளில் சில

வெளியான ஆய்வுக்கட்டுரைகள்

இருதய யோய் சிகிச்சை துறையில் அறிந்து கொள்வதற்கான தளத்தை விரிவுப்படுத்துக்கொண்டிருக்கும் மருத்துவர் ஜி செங்கோட்டுவேலு, பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை புகழ்பெற்ற Eurointervention, Journal of the American College of Cardiology, Indian Heart Journal, Heart, Lung and Circulation – Journal, Asia Intervention, Cath Lab Digest, International Journal of Cardiology போன்ற மருத்துவ சஞ்சிகைளில் எழுதியுள்ளார். புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

 

டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.

ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666

மருத்துவம் சார்ந்த விசாரிப்புகளுக்கு
அலைபேசி:
+91-944-522-6666

அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641