Select Page

ரோடாப்ளேஷன்

ரோடாப்ளேஷன் என்பது வைரம் பூசப்பட்ட முனையுடன் இருக்கும் சிறிய ட்ரில் ஆகும். காற்றழுத்ததின் மூலம் கரோனரி தமனியில் கால்சியத்தால் சேர்ந்த அடைப்பை உடைக்க இது பயன்படுத்தப்படுகிறது. இந்த அடைப்பை உடைப்பதால் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராகும்.

 

ரோடாப்ளேஷன் என்பது ஏகோர்ன் வடிவகத்தில், வைரம் பூசப்பட்ட நுனியுடன் உங்கள் கரோனரி தமனியில் குறுகியிருக்கும் பகுதிக்கு செலுத்தப்படும் ஒரு சிறப்பு வடிகுழாயாகும். இதன் முனை அதிவேகத்தில் சுழன்று தமனி சுவர்களில் உள்ள திட்டுகளை அரைத்துக் கரைக்கிறது. இதில் வரும் நுண்ணிய துகள்கள் இரத்த ஓட்டத்தில் அடித்து சென்றுவிடும். இந்த திட்டு கடினமாக இருக்கும்போதோ அல்லது ஆஞ்சியோப்ளாஸ்டியில் பயன்படுத்தப்படும் பலூன் அதைக் கடந்து செல்ல முடியாத அளவுக்கு இருக்கும்போதோ ரோடாப்ளேஷன் பலன் கொடுக்கும்.

ஒரு சிறப்பு வடிகுழாய் (ஒரு மெல்லிய குழாய்) கம்பியுடன் செலுத்தப்படும். அதன் நுனியில் ஒரு சிறிய துளையிடும் கருவி செருகப்படுகிறது, இது காற்றழுத்தத்தால் இயக்கப்படுகிறது. இத்துளையிடும் கருவி படிப்படியாக திட்டை உடைத்து மெதுவாக குறுகிய பகுதியை விரிவாக்கும். இது முடிந்ததும் ஒரு பலூனை செலுத்தி ஆஞ்சியோபிளாஸ்டியை தொடரலாம்.

 

ரோடாப்ளேஷன்

என்ன, எப்படி?

ரோடாப்ளேஷன் என்பது வழக்கான பிசிஐ நடைமுறையுடன் கூடுதலாகக் செய்யப்படும் நடைமுறையாகும். பி.டி.சி.ஏ நடைமுறையில் பலூன்கள் மற்றும் ஸ்டெண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்படும். ரோடாப்ளேஷனில் கூடுதலாக ஒரு சிறிய துளையிடும் கருவியும் (ட்ரில்) பயன்படுத்தப்படுகிறது, இது காற்றின் அழுத்தத்தால் இயக்கப்பட்டு அடைப்புகளை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது.

சேர்ந்திருக்கும் காரைத்திட்டுகளை உடைப்பதன் மூலம் இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். இச்சிகிச்சை முறையில் ஒரு வடிகுழாய் கரோனரி தமனிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. கரோனரி தமனிக்குள் ஸ்டெனோசிஸைக் கடக்க ஒரு வழிகாட்டிக்கம்பி பயன்படுத்தப்படுகிறது. கால்சியத்தால் சேர்ந்த திட்டுகளை அகற்ற ஒரு துளையிடும் கருவி பயன்படுத்தப்படுகிறது.

பர் (துளையிடும் கருவி) ஒரு வடிகுழாய் (குழாய்) மூலம் தமனிக்குள் செலுத்தப்படுகிறது. அது செயல்பட ஆரம்பித்ததும் அடைப்பு நீங்கி தமனி அகலமாகும் வரை அதுமேலும் கீழும் நகர்ந்துகொண்டே இருக்கும். இதைத் தொடர்ந்து வழக்கமான பிசிஐ நடைமுறை ஸ்டென்ட் மற்றும் பலூன் மூலம் செய்யப்படுகிறது.

யாருக்கு?

தமனிகளுக்குள் கால்சியத்தால் உருவான காரைத்திட்டுகள் அதிகமாகி கடினமாகும்போது ரோடாப்ளேஷன் தேவைப்படுகிறது. கால்சியம் சேர்க்கையால் அடைப்புகள் பெரியதாக இருக்கும்போது தமனியை அகலப்படுத்த வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி முறை கைகொடுக்காது. எனவே மிதமான மற்றும் கடுமையான கால்சியம் அடைப்பு பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு ரோடப்ளேஷன் மூலம் அடைப்புகளை உடைத்த பின் பலூன் மற்றும் ஸ்டெண்ட் மூலம் சிகிச்சை தரப்படுகிறது.

யார் செய்கிறார்கள்?

அனுபவம் வாய்ந்த இருதய நோய் நிபுணர்களால் மட்டுமே செய்யப்படும் ஒரு முக்கிய செயல்முறை ரோடாப்ளேஷன் ஆகும். டாக்டர் செங்கோட்டுவேலு  ரோடப்ளேஷன் அதிரெக்டோமி சிகிச்சையில் நாட்டிலேயே மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களில் ஒருவராவார். தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறைய அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

 

டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.

ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666

மருத்துவம் சார்ந்த விசாரிப்புகளுக்கு
அலைபேசி:
+91-944-522-6666

அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641