Select Page

மருத்துவரின் பயணம்

மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு அவர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூத்த ஆலோசகர் மற்றும் தலைமை இருதய நோய் நிபுணராகப் பணிபுரிந்துவருகிறார்.

மிகவும் சவாலான பிசிஐ மற்றும் ஸ்டெண்டிங் சிகிச்சையை கையாள்வதில் கைதேர்ந்தவரான இவர் தோல்வழி இதய வால்வு மாற்று மற்றும் அறுவை சிகிச்சையிலும் (TAVI/TAVR, mitraclip  போன்றவை)  அனுபவமிக்கவர்.  இவர் தற்போது சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள டாக்டர் ஜி.எஸ். இதய மருத்துவமனையிலும் (Dr G.S. Heart Clinic) ஆலோசனை வழங்கிவருகிறார்.

 

புகழ்பெற்ற மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற இவர் அதனை தொடர்ந்து மணிபாலில் அமைந்த்துள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் Internal Medicine பட்டத்தையும், அதன் பின் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் இருதயவியல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.

மேலும் ஃப்ரான்ஸ் கல்வி நிறுவனமான கார்டியோவாஸ்குலேர் பாரிஸ் சுட்டில் உலக புகழ்பெற்ற மருத்துவரான மேரி கிளாட் மோரிஸ் மேற்பார்வையில் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி ஃபெலோஷிப்பை மேற்கொண்டார்.

மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளுக்காக புகழ்பெற்ற  Eurointervention, Journal of the American College of Cardiology, Indian Heart Journal, Heart, Lung and Circulation – Journal, Asia Intervention, Cath Lab Digest, International Journal of Cardiology போன்ற மருத்துவ சஞ்சிகைளில் மருத்துவம் சார்ந்த மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பல்வேறு புத்தகங்கள், 300க்கும் மேற்பட்ட  ஆய்வுக் கட்டுரை சுருக்கங்களை எழுதியுள்ளார். கருத்தரங்குகளில் பல்வேறு நிலை நேர்வு ஆய்வுகள் பற்றி பேசியுள்ளார். ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சமகால மருத்துவர்களி; இவரது தொழில்நுட்ப அறிவுதான் அதிகமென்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சிக்கலான கரோனரி ஸ்டென்டிங் மற்றும் கட்டமைப்பு இதய வால்வு சிகிச்சைகளில் தனது  பங்களிப்புக்காக அங்கீகாரம் பெற்றுள்ளவர். கேத்லாபில் 15,000க்கும் மேற்பட்ட முறை சிகிச்சை செய்துள்ளார். இந்திய அளவில் இதய நோய் சிகிச்சையில் சிறந்து விளங்குவதால் சிக்கலான  ஸ்டென்டிங் மற்றும் வால்வு சிகிச்சை குறித்து முக்கிய கருத்துக்களை முன்வைப்பதில் பிரதான இடம் வகிக்கிறார்.

அப்பல்லோ குழும மருத்துவமனைகளில் 2015ஆம் ஆண்டு முதன் முறையாக டிரான்ஸ்கதீட்டர் வால்வு மாற்று சிகிச்சையை செய்ததன் மூலம் அங்கு இந்த சிகிச்சையைத் தொடங்கினார்.

தற்போது இந்தியாவில் இவர் ஒருவரே பல்வகை வால்வு சிகிச்சைமுறையில் அதிக அனுபவம் பெற்றவராக திகழ்ந்து வருகிறார். உலகின் மிகப்பெரிய இண்டெர்வென்ஷன் இருதயவியல் கல்வித் திட்டமான யூரோ பி.சி.ஆரின் திட்டக் குழுவில் உள்ளார்.

ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இருதய நோய் நிபுணர்களிடையே இவர் நன்கு பிரபலமானவர். VITAL (Visionary Transformative Adult Learning) அமைப்பின் உறுப்பினராக உள்ள இவர் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிக்கான ஆசிய பசிபிக் அமைப்பின் உறுப்பினர் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.

தற்போது வகித்துவரும் பதவிகள்

 • இயக்குநர், ஹார்ட் வால்வ் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா & இந்தியா வால்வ்ஸ்
 • நிறுவன இயக்குநர், இமேஜிங் அண்ட் ஃபிஸியாலஜி கவுன்சில் ஆஃப் இந்தியா
 • துணை ஆசிரியர், ஆசியா இண்டர்வென்ஷன் ஜர்னல் (யூரோபா, ஃபிரான்ஸ்)
 • பொருளாளர், ஆசியா-பசிபிக் சொசைட்டி ஃபார் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி, 2017-19
 • போர்டு உறுப்பினர்: ஆசியா-பசிபிக் சொசைட்டி ஃபார் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி
 • ஆலோசனை போர்டு உறுப்பினர் – கார்டியோவாஸ்குலர் யூரோப்பியன் ரிசர்ச் செண்டர் CERC – ஆசியா (சிங்கப்பூர்)
 • இண்டியன் ஹார்ட் ஜர்னலின் ஆசிரியர் குழு ஆலோசனை உறுப்பினர்
 • போர்டு உறுப்பினர் & இணை இயக்குநர், ஆசியா PCR, சிங்கப்பூர்
 • திட்டக்கமிட்டி உறுப்பினர் – PCR டோக்கியோ வால்வ்ஸ், ஜப்பான் 2017-19
 • போர்டு உறுப்பினர்: ஆசியா-பசிபிக் சொசைட்டி ஃபார் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி
 • திட்டக் கமிட்டி உறுப்பினர் – Euro PCR 2019

இதற்கு முன் வகித்து வந்த பதவிகள்

 • சிறப்பு கார்டியாலஜி பேராசிரியர்& இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட், ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம், 2003-2009
 • பேராசிரியர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை, 2012-17
 • போர்டு உறுப்பினர், ஆசியா PCR 2015-18
 • இணை இயக்குனர், இண்டியா லைவ், 2017 முதல் இன்றுவரை
 • போர்டு உறுப்பினர் – PCR டோக்கியோ வால்வ்ஸ், ஜப்பான் 2017-19
 • இணை இயக்குநர் – SCAI (USA) Fellows Course (India) September, 2013
 • இணை இயக்குநர் – ஆசியா BRS மாநாடு
 • போர்டு உறுப்பினர்: ஆசியா-பசிபிக் சொசைட்டி ஃபார் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி, 2014-16
 • இயக்குநர், ஆர்டோ இண்டியா & ஸ்ட்ரக்சுரல் மாநாடு, 2018-19

வழங்கப்பட்டுள்ள ஃபெல்லோஷிப்புகள்

 • FSCAI – Fellow of Society for Coronary Angiography & Interventions, USA 2008
 • FMMC – Fellow of Madras Medical College 2010
 • FCSI – Fellow of Cardiological Society of India 2012
 • FRCP – Fellow of Royal College of Physicians, Glasgow 2013
 • FACP – Fellow of American College of Physicians, 2013
 • FRCP – Fellow of Royal College of Physicians, London 2016

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

 

டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.

ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666

மருத்துவம் சார்ந்த விசாரிப்புகளுக்கு
அலைபேசி:
+91-944-522-6666

அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641