Select Page

ட்ரான்ஸ்கதீடர் நுரையீரல் வால்வு மாற்று சிகிச்சை

 வழக்கமான திறந்த இதய அறுவை சிகிச்சையின் தேவை இல்லாமல் இதயத்தில் உள்ள நுரையீரல் வால்வை மாற்றுவதற்கான ஒரு வழி TPVR எனப்படும் டிரான்ஸ்கேட்டர் நுரையீரல் வால்வு மாற்றுச் சிகிச்சையாகும்.

பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு அவர்களின் நுரையீரல் வால்வில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வால்வில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பல நோயாளிகளுக்கு வால்வு மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். பத்து வருடங்களுக்கு முன்பு வரை பாதிக்கப்பட்ட நுரையீரல் வால்வை மாற்றுவது இதய அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே சாத்தியமாக இருந்தது.

அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட அனைத்து வால்வுகளுக்கும் குறிப்பிட்ட ஆயுட்காலம் மட்டுமே இருந்ததால், நோயாளிகள் நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக தங்கள் வாழ்நாளில் மீண்டும் மீண்டும் பல அறுவை சிகிச்சைகளை எதிர்கொள்ளும் நிலை இருந்தது. இந்த நிலையில், ஊசியளவு துளையிட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சை மூலம் நுரையீரல் வால்வு மாற்று சிகிச்சை நோயாளிகள் பராமரிப்பில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது.

ட்ரான்ஸ்கதீடர் நுரையீரல் வால்வு மாற்று சிகிச்சை (TPVR) என்றால் என்ன?
பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு அவர்களின் நுரையீரல் வால்வில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்த வால்வில் பிரச்சினைகள் வருகின்றன. பல நோயாளிகளுக்கு, வால்வு மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.

ட்ரான்ஸ்கதீட்டர் நுரையீரல் வால்வு மாற்று சிகிச்சை

என்ன?

பிறப்பிலேயே இருதய நோய் இருப்பவர்களுக்கு அவர்களின் நுரையீரல் வால்விலும், பிறப்பிலிருந்தோ, இருதய அறுவை சிகிச்சைப் பிறகோ பிரச்சினை இருக்கும். அப்படிப்பட்ட நோயாளிகள் பலருக்கு, வால்வ் மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

எப்படி?

டிரான்ஸ்கதீடர் நுரையீரல் வால்வு மாற்றின் நோக்கம் நுரையீரல் வால்வை அறுவை சிகிச்சை செய்யாமல் மாற்றுவதும், நோயாளிக்கு அவரது வாழ்வில் இதய அறுவை சிகிச்சையின் தேவையை குறைப்பதும் ஆகும்.

யாருக்கு?

ட்ரான்ஸ்கதீட்டர் நுரையீரல் வால்வு மாற்று சிகிச்சை மேற்கொள்பவர்கள்:

இதற்கு முன் அறுவை சிகிச்சை செய்து இப்போது கசிவு இருக்கும் அல்லது குறுகிய நுரையீரல் வால்வு உடையவர்களாக இருக்கலாம். முக்கியமாக இதற்கு முன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு வரலாம்.

 மற்ற நோய்கள் கொண்டவர்களாக இருக்கலாம். அவர்கள் இதற்கு முன் அறுவை சிகிச்சை மூலம் மாற்று நுரையீரல் வால்வு பெற்று (ஹோமோகிராஃப்ட் அல்லது பயோப்ராஸ்தடிக் செயற்கை வால்வுகள்) அது செயல்படுவது நின்று போயிருக்கலாம்.

 மேலும், ட்ரங்கஸ் ஆர்டரியோசஸ் என்ற தமனி பிரச்சினை, பெருநாடி வால்வு நோய் உள்ளவர்கள், பெருநாடி வால்வுக்குப் பதிலாக நுரையீரல் வால்வை பொருத்தியிருக்கும் ராஸ் ப்ரொசீஜர் சிகிச்சையை மேற்கொண்டவர்கள் அல்லது நுரையீரல் தமனியில் இரத்த ஓட்டம் தடைபடும் பல்மோனரி ஸ்டெனோசிஸ் அல்லது ஆட்ரேசியா என்ற பிரச்சினை உடையவர்களும் இந்த சிகிச்சையை பலன் தரும்.

யார் மருத்துவர்?

சென்னை அப்பல்லோ மருத்துவமனைகளில் மருத்துவர் ஜி செங்கோட்டுவேலு இதை செய்கிறார்.

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

 

டாக்டர் ஜீ எஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.

ஜீ .எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666

மருத்துவம் சார்ந்த விசாரிப்புகளுக்கு
அலைபேசி:
+91-944-522-6666

அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641