TAVR
ட்ரான்ஸ்கத்தீட்டர் பெருநாடி வால்வு மாற்று சிகிச்சை என்பது சரியாக திறக்கத் தவறிய ஒரு குறுகிய பெருநாடி வால்வை மாற்றுவதற்கான சிகிச்சை முறையாகும். இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள ஸ்க்ரால் செய்யவும்.
TAVR என்பது குறைந்த, இன்வேசிவ் பெர்குடனியஸ் செயல்முறையாகும். இச்சிகிச்சை முறையில் சேதமடைந்த/பழைய வால்வை அகற்றாமலே அதை மாற்ற முடியும். இது மாற்று வால்வை பெருநாடி வால்வு தளத்தில் இணைக்கிறது. பொதுவாக வால்வை மாற்றுவதற்கு இதய அறுவை சிகிச்சை தேவைபடும். ஆனால் இச்சிகிச்சை முறையில் ஆஞ்சியோப்ளாஸ்டி போன்று தொடை தமனியில் (இடுப்பில்) ஒரு வடிகுழாய் வைக்கப்பட்டு, இதயத்தின் அறைகளுக்குள் வழிநடத்தப்படும்.
சுருக்கப்பட்ட திசு இதயவால்வு வடிகுழாயில் வைக்கப்பட்டு நோயுற்ற பெருநாடி வால்வுக்குள் நேரடியாக நிலைநிறுத்தப்படும். புதிய வால்வு விரிவாக்கப்பட்டதும், அது பழைய வால்வின் துணுகுக்களை வெளியே தள்ளும். மேலும் மாற்று வால்வில் உள்ள திசு இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் வேலையைக் கையாள துவங்கும்.
TAVR
என்ன?
ட்ரான்ஸ்கதீட்டர் பெருநாடி வால்வு மாற்று (TAVR) அல்லது டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு உள்வைப்பு (TAVI) என்பது மிகக் குறைவான ஆக்கிரமிப்பு இதய வால்வு மாற்று செயல்முறையாகும். இது அறுவை சிகிச்சைக்கு வழிவகுக்காமல் குறுகலான பெருநாடி வால்வை சரிசெய்கிறது.
எவ்வாறு?
நோயாளியின் உடல்நிலைக்கேற்றவாறு மயக்கமருந்து வழங்கப்படும். வடிகுழாய் நுனியில் பலூனை வைத்து இடுப்பு (பொதுவாக) வழியாக தமனிக்குள் செருகப்படும். இதயத்திற்குள் ஃப்ளோரோஸ்கோபி (எக்ஸ்-கதிர்கள்) வழிநடத்தும் இரத்த நாளங்கள் வழியாக வடிகுழாய் அனுப்பப்பட்டு குறுகலான பெருநாடி வால்வுக்குள் நிலைநிறுத்தப்படும்.
அதன் பின்னர் புதிய திசு வால்வுக்கு இடமளிக்க பலூன் மெதுவாக உயர்த்தப்படும். புதிய வால்வு இப்போது இடுப்பு இரத்தநாளத்தின் வழியாக செருகப்பட்டு மெதுவாக இதயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு குறுகலான பெருநாடி வால்வில் வைக்கப்படும். வால்வின் வகையைப் பொறுத்து புதிய வால்வு தானாக விரிவடையும் அல்லது பலூனைப் பயன்படுத்தி விரிவடைய வைக்கும். பலூன் நீக்கப்பட்டு பின்னர் வடிகுழாய் அகற்றப்படும்.
புதிய வால்வு பழைய சேதமடைந்த வால்வுக்குள் அமர்ந்து கொள்ளும். பொதுவாக பெருநாடி வால்வுக்கு மேலிருக்கும் கால்சியத்தால் இது இறுக்கமாகப் பிடித்து கொள்ளும். வால்வு செயல்பாட்டை உறுதிசெய்த பின்னர், இடுப்பு இரத்தநாளங்கள் ஒரு பெர்குடனியஸ் சூஷனைப் பயன்படுத்தி மூடப்பட்டு இரத்த நாளங்கள் ஊசியளவு துளையிட்டுத் தைக்கப்படும்
யாருக்கு?
வழக்கமான இதய அறுவை சிகிச்சைக்கு ஒவ்வாத நோயாளிகளுக்கு இந்த TAVR சிகிச்சையே சிறந்த முறையாகும். அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்தாலும், மற்ற நோய்களின் ஆபத்து இருக்கும் நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சைமுறை பரிந்துரைக்கப்படுகிறது. TAVR முறை, பக்கவாத பாதிப்பு வந்தவர்கள், திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், செஸ்ட் ரேடியஷன் மேற்கொண்டவர்கள், நுரையீரல் அடைப்பு இருக்கும் (COPD) நோயாளிகள், பலவீனமானவர்கள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் என பலதரப்பினருக்கும் ஏற்ற சிகிச்சை முறை இதுவாகும்.
யார் இதைக் கையாள்வார்கள்?
2015ஆம் ஆண்டில் அப்போல்லோ மருத்துவமனையில் நாட்டிலேயே முதன்முறையாக TAVR வழிமுறையைக் கையாண்டவர் டாக்டர் ஜி செங்கோட்டுவேலு அவர்கள். அன்றிலிருந்து கிட்டத்தட்ட 50 முறை இந்த TAVR சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
உலகின் அனைத்து சிறந்த TAVR முறைகளையும் செய்ய அங்கீகரிக்கப்பட்ட முதல் மையம் இதுதான். சமீபத்தில் Evolut PRO மற்றும் Indian Myval system ஆகியவையும் துவங்கப்பட்டு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன.
டாக்டர் செங்கொட்டுவேலு தலைமையில், இருதய நோய் நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், இமேஜிங் நிபுணர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் இணைந்து இந்த சிகிச்சையை மேற்கொள்வார்கள். இவர்கள் அனைவரும் பல வகையான வால்வு சிகிச்சைகளில் அனுபவம் பெற்றவர்கள்.
ஸ்விட்சர்லாந்து, ஃபிரான்ஸ் மற்று அமெரிக்காவில் TAVRக்கான கூடுதல் பயிற்சிகளைப் பெற்றவர் டாக்டர் செங்கோட்டுவேலு. இந்தியாவின் இதய வால்வு அமைப்பின் தற்போதைய இயக்குநராக செயல்பட்டுவருகிறார். கதீடர் கொண்ட வால்வு சிகிச்சை பற்றிய இந்தியா வால்வ்ஸ் என்கிற மிகப்பெரிய ஆராய்ச்சிச் சந்திப்பின் திட்ட இயக்குநர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
இந்தியாவில் TAVR பற்றிய அதிக ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர் இவர். இவற்றில் சில ஆய்வுக்கட்டுரைகள் முன்னணி மருத்துவம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
டிரான்ஸ்கதீடர் மிட்ரல் வால்வு மாற்று சிகிச்சை (TMVR)
என்ன?
மிட்ரல் வால்வு மிகவும் சிக்கலான கட்டமைப்பாகும். அதன் திறனும் செயல்பாடும் அதன் கூறு பாகங்களின் இணக்கமான செயலைச் சார்ந்துள்ளது
எப்படி?
TMVR அல்லது டிரான்ஸ்கதீடர் மிட்ரல் வால்வு மாற்றுதல் என்பது வழக்கமான திறந்த இதய அறுவை சிகிச்சையின் மூலமன்றி இதயத்தில் உள்ள மிட்ரல் வால்வை மாற்றுவதற்கான ஒரு வழியாகும். TMVR டிரான்ஸ்கதீடர் மிட்ரல் வால்வு மாற்று சிகிச்சை என்பது மிட்ரல் வால்வு ஸ்டெனோசிஸ் (இறுக்கமான மிட்ரல் வால்வு) அல்லது மிட்ரல் வால்வு ரீகர்ஜிடேஷன் (மிட்ரல் வால்வில் கசிவு) ஏற்படும்போதோ, அல்லது இரண்டும் நேரும்போதோ மேற்கொள்ளப்படும் சிகிச்சையாகும்.
ட்ரான்ஸ்கதீடர் மிட்ரல் வால்வு சிகிச்சையில் வால்வை ஒரு க்ளிப் கொண்டு மூடுவதன் மூலம் கசிவை குறைக்கிறது. இது கசிவு இருக்கும் வால்வைப் பரிபூர்ணமாகச் சரிசெய்வதில்லை. ஆனால் மூச்சுத்திணறல், உடல் சோர்வு உள்ளிட்ட மிட்ரல் வால்வு பிரச்சினைகளுக்கான அறிகுறிகளை குணமாக்குகிறது.
யாருக்கு?
பொதுவாக மிட்ரல் வால்வில் கசிவு ஏற்படுபவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லையென்றால், ட்ரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு சிகிச்சை அவர்களுக்கு ஒரு புதிய, குறைந்த அளவிலான துளையிடும் சிகிச்சையைப் பெற உதவுகிறது.
யார் இதைக் கையாள்வார்கள்?
டாக்டர் செங்கோட்டுவேலு ஜி,
ஜி எஸ் ஹார்ட் க்ளீனிக், தி.நகர், சென்னை
அனுபவப் பதிவுகள் வீடியோ வடிவில்
உங்கள் ஆரோக்கியம் இங்கிருந்து ஆரம்பமாகிறது
TAVR பற்றிய தகவல் குறிப்பை டவுன்லோட் செய்
மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை
டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.
ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666
அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641