Select Page

ட்ரான்ஸ்கத்தீட்டர் முக்கூர் வால்வு மாற்று சிகிச்சை

டிரான்ஸ்கேட்டர் ட்ரைகுஸ்பிட் வால்வு மாற்று சிகிச்சை என்பது இதய அறுவை சிகிச்சை தேவையில்லாமல் குறைபாடுள்ள முக்கூர் வால்வை மாற்றுவதற்கான வடிகுழாய் அடிப்படையிலான சிகிச்சை முறையாகும்.

முக்கூர் வால்வு இதயத்தின் வலது மேலறை (ஏட்ரியம்) மற்றும் கீழறை (வென்ட்ரிக்கிள்) இடையே அமைந்துள்ளது. வலது ஏட்ரியத்திலிருந்து வென்ட்ரிக்கிள் வரை இரத்தம் இதயத்தின் வழியாக சீராகப் பாய்கிறதா என்பதை உறுதிசெய்வதே இதன் செயல்பாடு. முக்கூர் வால்வில் உள்ள மூன்று மடிப்புகள் இரத்த ஓட்டத்தையும், திசையையும் கட்டுப்படுத்துகின்றன. சிலருக்கு இந்த வால்வு சரியாக செயல்படாது. அவர்களுக்கு முக்கூர் வால்வு நோய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

முக்கூர் வால்வு நோயின் மிகப்பொதுவான வடிவம் முக்கூர் ஸ்டெனோசிஸ் (tricuspid stenosis) ஆகும், அதாவது வால்வின் மடிப்புகள் கடினமாகி திறக்காமல் போகலாம்; வால்வு நோயின் மற்றொரு வடிவம் முக்கூர் ரீகர்ஜிடேஷன். இங்கு மடிப்புகள் மூடாமல் இரத்தம் இதயத்தின் கீழறைப்பகுதிக்குப் போகாமல் பின்னோக்கிக் கசியும்.

ட்ரான்ஸ்கத்தீட்டர் முக்கூர் வால்வு மாற்று சிகிச்சை

என்ன?

முக்கூர் வால்வு இதயத்தின் வலது மேலறை (ஏட்ரியம்) மற்றும் கீழறை (வென்ட்ரிக்கிள்) இடையே அமைந்துள்ளது. வலது ஏட்ரியத்திலிருந்து வென்ட்ரிக்கிள் வரை இரத்தம் இதயத்தின் வழியாக சீராகப் பாய்கிறதா என்பதை உறுதி செய்வதே இதன் செயல்பாடு..

எப்படி?

 தொடை நரம்பு வழியாகச் செலுத்தப்படும வால்வு முக்கூர் நிலையில் நிறுத்தப்பட்டு பொருத்தப்படுகிறது.

 

யாருக்கு?

முக்கூர் வால்வில் கசிவு ஏற்படும் நோயாளிகளுக்கு; இது முக்கூர் ரீகர்ஜிடேஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்குச் சிறப்பு வால்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது பொருத்தப்பட்ட வால்வுகள் சரியாக செயல்படாத நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. முக்கூர் வால்வில் உள்ள மூன்று மடிப்புகள் இரத்த ஓட்டத்தையும் திசையையும் கட்டுப்படுத்துகின்றன. சிலருக்கு இந்த வால்வு சரியாக செயல்படாது, அவர்களுக்கு ட்ரைகுஸ்பிட் வால்வு நோய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

யார் இதைக் கையாள்வார்கள்?

சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர் செங்கோட்டுவேலு தலைமையில் இருதய நோய் நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், இமேஜிங் நிபுணர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் இணைந்து இந்த சிகிச்சையை மேற்கொள்வார்கள்.

இவர்களுடன் மருத்துவ உதவியாளர்களும் நோயாளியின் உறவினர்களுடன் இணைந்து மருத்துவ பரிசோதனையில் தொடங்கி விரைவாக குணமடைவது வரை உடனிருந்து உதவுவார்கள்.

இவ்வளவு பேரின் பல வருடக் கல்வி, பயிற்சி, அனுபவத்துடன் மேம்பட்ட மருத்துவமுறைகளையும், தொழில்நுட்பங்களையும் சேர்த்து, நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் இருக்கும் சூழலில் பயன்படுத்துகின்றனர். மருத்துவக் குழு உறுப்பினர்களோடும், நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர், அவர்களுக்கு அதற்கு முன் சிகிச்சை அளித்தவர்கள் ஆகியவர்களோடும் வெளிப்படையாக கலந்தாலோசித்தே முடிவுகள் எடுக்கப்படும். இது நோயாளிகள் குணமடைய முக்கியமான காரணியாகும்.

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

 

டாக்டர் ஜீ எஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.

ஜீ .எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666

மருத்துவம் சார்ந்த விசாரிப்புகளுக்கு
அலைபேசி:
+91-944-522-6666

அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641