Select Page

ட்ரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு மாற்று சிகிச்சை

மிட்ரல் வால்வு மிகவும் சிக்கலான கட்டமைப்பாகும். அதன் திறனும் செயல்பாடும் அதன் கூறு பாகங்களின் இணக்கமான செயலைச் சார்ந்துள்ளது.
 

TMVR டிரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு மாற்று சிகிச்சை என்பது மிட்ரல் வால்வு ஸ்டெனோசிஸ் (இறுக்கமான மிட்ரல் வால்வு) அல்லது மிட்ரல் வால்வு ரீகர்ஜிடேஷன் (மிட்ரல் வால்வில் கசிவு) ஏற்படும்போதோ, அல்லது இரண்டும் ஏற்படும்போதோ மேற்கொள்ளப்படும் சிகிச்சையாகும்.

இச்சிகிச்சை ஏற்கனவே பயோ ப்ராஸ்தடிக் வால்வு அல்லது ரிங்க் மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்த நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை. ஆனால் மிட்ரல் வால்வைப் பொறுத்தவரை, பொருத்தமான உடல் தகுதி கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. தொழில்நுட்பங்கள் வளர, இதன் பலன்கள் நிரூபிக்கப்பட, வரும் காலத்தில் TMVR, மிட்ரல் வால்வு மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு மாற்றாக அமையும்

TMVR

என்ன?
TMVR அல்லது ட்ரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு மாற்றுதல் என்பது வழக்கமான இதய அறுவை சிகிச்சையின் தேவை இல்லாமல் இதயத்தில் உள்ள மிட்ரல் வால்வை மாற்றுவதற்கான ஒரு வழியாகும். TMVR டிரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு மாற்று சிகிச்சை என்பது மிட்ரல் வால்வு ஸ்டெனோசிஸ் (இறுக்கமான மிட்ரல் வால்வு) அல்லது மிட்ரல் வால்வு ரீகர்ஜிடேஷன் (மிட்ரல் வால்வில் கசிவு) ஏற்படும்போதோ, அல்லது இரண்டும் ஏற்படும்போதோ மேற்கொள்ளப்படும் சிகிச்சையாகும்.

மிட்ரல் வால்வு மிகவும் சிக்கலான கட்டமைப்பாகும். அதன் திறனும் செயல்பாடும் அதன் கூறு பாகங்களின் இணக்கமான செயலைச் சார்ந்துள்ளது.

எப்படி?
ட்ரான்ஸ்கதீடர் மிட்ரல் வால்வு மாற்று முறையில் வடிகுழாய் கவட்டு வழியாக உடலில் நுழைக்கப்பட்டு, பின்னர் இதயத்தின் இடது பக்கத்தில் ஊசியளவு ஓட்டை மூலம் நுழைகிறது. மிட்ரல் வால்வைத் தாண்டி, பின்னர் ட்ரான்ஸ்கதீடர் வால்வு அங்கு பொருத்தப்படுகிறது. அது மிட்ரல் பக்கம் செலுத்தப்படுகிறது.

தற்போது இந்த சிகிச்சை முறை, பயோப்ராஸ்தடிக் வால்வு மாற்று தோல்வியடைந்தவர்களுக்கு மாற்று வால்வு பொருத்தப்படுகிறது. இயற்கையான மிட்ரல் வால்வு மாற்றுக்கு இன்னும் சில புதிய சாதனங்கள் வைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாருக்கு?
இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு, குறைபாடுள்ள மிட்ரல் வால்வுக்கு சிகிச்சையளிக்கவும் ட்ரான்ஸ்கதீடர் மிட்ரல் வால்வு அவர்களுக்கு புதிய, குறைந்த அளவிலான துளையிட்டு பெறும் சிகிச்சையாக இருக்கிறது. பொதுவாக இச்சிகிச்சை முறை, இதற்கு முன் மிட்ரல் வால்வு அறுவை சிகிச்சை தோல்வியடைந்த நோயாளிகளுக்கும், பயோப்ராஸ்தடிக் முறை (Valve in valve procedures) தோல்வியடைந்த நோயாளிகளுக்கும் செய்யப்படுகிறது.
யார் இதைக் கையாள்வார்கள்?

சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர் செங்கோட்டுவேலு தலைமையில்  இருதய நோய் நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள்,  இமேஜிங் நிபுணர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் இணைந்து இந்த சிகிச்சையை மேற்கொள்வார்கள்.

இவர்களுடன் மருத்துவ உதவியாளர்களும் நோயாளியின் உறவினர்களுடன் இணைந்து மருத்துவ பரிசோதனையில் ஆரம்பித்து விரைவாக குணமடைவது வரை உடனிருந்து உதவுவார்கள். இவ்வளவு பேரின் பல வருடக் கல்வி, பயிற்சி, அனுபவத்தோடு மேம்பட்ட மருத்துவமுறைகளையும், தொழில்நுட்பங்களையும் சேர்த்து, நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் இருக்கும் சூழலில் பயன்படுத்துகின்றனர்.

மருத்துவக்குழு உறுப்பினர்களோடும், நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர், அவர்களுக்கு அதற்கு முன் சிகிச்சை அளித்தவர்கள் ஆகியவர்களோடு வெளிப்படையாக கலந்தாலோசித்தே முடிவுகள் எடுக்கப்படும். இது நோயாளிகள் குணமடைய முக்கியமான காரணியாகும்.

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

 

டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.

ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666

மருத்துவம் சார்ந்த விசாரிப்புகளுக்கு
அலைபேசி:
+91-944-522-6666
அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641