Select Page

இன்ட்ராகோரோனரி பிசியாலஜி (FFR)

ஃப்ராக்ஷனல் ஃப்ளோ ரிசர்வ் (FFR) தொழில்நுட்பம் இருதய நோயாளிக்கு ஸ்டென்ட் அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை தேவையா அல்லது மருந்துகளால் அவரை குணப்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகிறது. FFR என்பது கரோனரி அழுத்தம் மற்றும் பெருநாடி அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையேயான விகிதமாக வரையறுக்கப்படுகிறது, இரண்டும் ஒரேநேரத்தில் அதிகபட்ச ஹைபரேமியாவில் அளவிடப்படுகின்றன.

இவ்விரண்டு புள்ளிகளுக்கிடையேயான அழுத்தத்தின் வேறுபாடு அடைப்பின் தீவிரத்தன்மை பற்றிய தகவல்களைத் தரும்; மேலும் ஸ்டென்டிங் போன்ற நடைமுறைகளைப் பயன்படுத்தி அடைப்பு அழிக்கப்பட வேண்டுமா அல்லது மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி சிகிச்சையளிக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்கவும் இது உதவும்.

FFR தொழில்நுட்பம் தேவையற்ற அறுவைச் சிகிச்சையைத் தவிர்த்து உயிர்களைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் நோயாளிகளுக்கு செலவைக் குறைக்கவும் உதவுவதால் இந்த அறிவியல் மற்றும் ஆதார அடிப்படையிலான செயல்முறை நோயாளிக்கு நன்மை பயக்கிறது.

ஃப்ராக்ஷனல் ஃப்ளோ ரிசர்வ் அளவு மதிப்பீடானது இதய அடைப்பு ஏற்பட்டுள்ள நோயாளிக்கு தேவை ஆஞ்சியோப்ளாஸ்டியோ அல்லது ஸ்டெண்டிங்கா அல்லது சிகிச்சை தேவையா என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது. குறுகிய மற்றும் அடைப்பு இருக்கும் கரோனரி தமனிகளுக்கு சிகிச்சை தருவது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவே.

ஆனால் பல ஆய்வுகள், ஃப்ராக்சனல் ஃப்ளோ ரிசர்வ் போன்ற ஒரு “செயல்பாட்டு அளவீடு” இரத்த ஓட்டம் கணிசமாக தடைபடவில்லை எனக் காட்டினால், அடைப்பு அல்லது புண்ணுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற சிகிச்சை தேவையில்லை. நோயாளிக்கு பாதுகாப்பாக மருத்துவ சிகிச்சையளித்தால் மட்டுமே போதும்.

 

FFR

என்ன?

FFR விகிதமாகவோ அல்லது பின்னமாகவோ குறிப்பிடப்படுகிறது.. FFR செயல்முறையின் போது, இருதய நோய் நிபுணர் இதயத்திற்கு மிக நெருக்கமான தமனிகளில் ஒரு கம்பியை எடுத்துச்செல்வார், இரத்த ஓட்டத்தையும், அழுத்தத்தையும் அளவிடுவார்.

அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறைகளை மேற்கொள்வதற்கு முன் FFR தொழில்நுட்பத்தின் பயன்பாடு உபயோகமானதாக உள்ளது. ஆஞ்சியோகிராமுக்கு இணையான ஒரு பரிசோதனையாக இது பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆஞ்சியோகிராஃபிமூலம் அடைப்பின் திடம் எவ்வளவு என அறிய முடியாத நிலையிலோ, அறுவை சிகிச்சை இன்றி பரிசோதனை மேற்கொண்ட நோயாளிகளிடமோ பயன்படுகிறது

எப்படி?

கரோனரி தமனி ஸ்டெனோசிஸின் அழுத்தத்தை அளவிட ஃப்ராக்ஷனல் ஃப்ளோ ரிசர்வ் (FFR) பரிசோதனை உதவுகிறது. இரத்த நாளத்தில் கவனமாகச் செலுத்தப்படும் சென்சார் மூலம் FFR தீர்மானிக்கப்படுகிறது. ரத்தக்கொதிப்பின் உயர்நிலை மற்றும் கீழ்நிலையை (அடைப்புக்கும் முன்னும் பின்னும்) இது அளவிடும்.

யாருக்கு?

அளவீட்டு கரோனரி தமனிகளில் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்திற்க்கு ஏற்பட்டிருக்கும் அடைப்பின் தீவிரத்தை மருத்துவர் அறிந்து கொள்ள FFR உதவுகிறது. இதன் மூலம் எந்த குறிப்பிட்ட புண் அல்லது புண்கள் (அல்லது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் அடைப்பு) இந்த அடைப்புக்குக் காரணம், எங்கு ஸ்டெண்ட் தேவை என்பதை மருத்துவர்களால் அடையாளம் காண முடிகிறது.

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

 

டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.

ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666

மருத்துவம் சார்ந்த விசாரிப்புகளுக்கு
அலைபேசி:
+91-944-522-6666

அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641