Select Page

ஆஞ்சியோபிளாஸ்டி

கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி பி.சி.ஐ அல்லது பி.டி.சி.ஏ என்றும் அழைக்கப்படுகிறது – இது குறைந்தபட்ச துளையிடுதல் மூலம் நடக்கும் அறுவை சிகிச்சையாகும். குறுகிய கரோனரி தமனிகளை அகலப்படுத்துவதன் மூலமும் திறப்பதன் மூலமும் இதயத் தசைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அதன் மூலம் கரோனரி இதய நோய் சிகிச்சைக்கு உதவுகிறது. மாரடைப்பு, மார்பு வலி, கரோனரி தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை சீராக்க இச்சிக்க்சை பயன்படுகிறது.

சிக்கலான ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் சிகிச்சை முறைகளில் முன்னோடியாக விளங்குபவர் டாக்டர் செங்கோட்டுவேலு .  ஸ்டெண்டுகள் பயன்பாடு குறித்த முடிவுகள் எடுப்பதிலும், பல்வேறு வகையான ஸ்டெண்டுகளின் தரத்தை மதிப்பிடுவதிலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் முக்கிய நபராக இருக்கிறர்.

கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கேத் லேப் என்ற ஆய்வகத்தில் செய்யப்படுகிறது. ஆஞ்சியோபிளாஸ்டிக்கு முன் ஆஞ்சியோகிராம் செய்யப்படுகிறது. இதில் பெறப்படும் டிஜிட்டல் படங்களிலிருந்து கரோனரி தமனிகள் குறுகியுள்ளதா இல்லையா என்பதை அறிய முடியும். பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் என இருவகை ஆஞ்சியோபிளாஸ்டி நுட்பங்கள் இருக்கின்றன.

டாக்டர் செங்கோட்டுவேலு இந்தியாவில் ரேடியல் ஆஞ்சியோகிராம் நடைமுறைகளுக்கு முன்னோடியாகத் திகழ்பவர். சிகிச்சை முடிந்த ஒரே நாளில், கிட்டத்தட்ட சிகிச்சை முடிந்த அன்றே சிகிச்சை பெற்றவர் வீட்டுக்கு திரும்பச் செல்லும் வகையில் இந்த சிகிச்சை முறையை சுலபமாக்கியவர் இவரே.

ஆஞ்சியோபிளாஸ்டி

ஆஞ்சியோகிராம் என்றால் என்ன?

ஆஞ்சியோபிளாஸ்டிக்கு முன் ஆஞ்சியோகிராம் செய்யப்படுகிறது. இச்சிகிச்சை முறையில் கவட்டை அல்லது கையில் ஒரு தமனிக்குள் ஒரு மெல்லிய பிளாஸ்டிக் குழாய் செருகப்படுகிறது. கதீட்டர் எனப்படுகிற ஒரு வடிகுழாய் போன்ற நீண்ட, குறுகிய குழாய் ஒன்று, உறை வழியாக, இரத்த நாளங்களைத் தாண்டி இதயத்தைச் சுற்றியுள்ள தமனிகள் வரை செலுத்தப்படுகிறது.

ஒரு சிறிய அளவு கான்ட்ராஸ்ட் திரவம் கதீட்டர் குழாய் வழியாக செலுத்தப்படுகிறது. அது இதயத்தின் அறைகள், வால்வுகள் மற்றும் முக்கிய நாளங்கள் வழியாக நகரும்போது எக்ஸ்ரே மூலம் (டிஜிட்டல்) புகைப்படம் எடுக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் படங்களிலிருந்து ஒருவரின் கரோனரி தமனிகள் குறுகியுள்ளதா இல்லையா என்பதை அறிய முடியும்.

டாக்டர் செங்கோட்டுவேலு இந்தியாவில் ரேடியல் ஆஞ்சியோகிராம் நடைமுறைகளுக்கு முன்னோடியாக திகழ்பவர்.  சிகிச்சையன்றே வீட்டிற்குத் திரும்பச் செல்லும் வகையில் சிகிச்சை முறையைச்  சுலபமாக்கியவர். மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் ஆஞ்சியோகிராம் செயல்முறை 10 நிமிடத்துக்கும் குறைவான நேரத்திலேயே முடிந்து விடும்.

 

ஆஞ்சியோபிளாஸ்டி நுட்பங்களின் வகைகள் என்ன?

பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி:

கதீட்டர் எனப்படுகிற மெல்லிய, நெகிழ்வான வடிகுழாய் தமனியில் செருகப்பட்டு இரத்த, நாளத்துக்குள் அடைப்பு இருக்கும் பகுதிக்கு வழிநடத்தப்படும். இருதய நோய் நிபுணர் கதீட்டரின் முடிவில் உள்ள ஒரு சிறிய பலூனைத் திறந்து அடைப்பை ஒதுக்கித் தள்ளி, தமனி வழியாக இரத்த ஓட்டத்தை சீராக்குகிறார்.

ஸ்டென்டிங்:

ஸ்டென்ட் என்பது ஒரு சிறிய குழாய் ஆகும், இது கரோனரி தமனி செயல்பாட்டுக்கு உதவும் வகையில் சாரம் போல செயல்படுகிறது. முதலில் துருப்பிடிக்காத எஃகாக வரத்துவங்கிய ஸ்டெண்டுள் தற்போது மெல்லிய கோபால்ட் குரோமியம் அல்லது பிளாட்டினம் குரோமியம் ஸ்டெண்டுகளாக உருமாறியுள்ளன. அதிக கால்சியம் குவிவதால் தீவிரமாகும் புண்களை நீக்க ரெக்டோமி சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஆஞ்சியோபிளாஸ்டியில் கதீட்டர் என்கிற வடிகுழாய் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

குறுகலான கரோனரி தமனிக்குள் ஸ்டெண்ட எடுத்துச் செல்ல கதீட்டர் பயன்படுத்தப்படுகிறது. சரியான இடத்துக்குச் சென்றதும், பலூன் முனை உப்பி, தமனியின் அளவுக்கு ஸ்டெண்ட் விரிவடைந்து அதை பிடித்துக்கொள்ளும். தற்போது பல வகை கதீட்டர்கள் இருக்கின்றன. அசல் பலூன் வடிகுழாய் முதல் அதிக இலகுவான மற்றும் மென்மையான வடிவங்கள் வரை கிடைக்கின்றன.

கதீட்டர்களில் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ன?

மாரடைப்புகளில் இதய தசையின் பெரிய பகுதியை பாதுகாக்க ClearWay RX – Rapid Exchange Therapeut Perfusion கதீட்டர் உதவுகிறது. கிராஸ்பாஸ் வடிகுழாய் என்பது நீண்ட கால மற்றும் 100% அடைபட்ட தமனிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான நவீன தொழில்நுட்பமாகும். ஒரு தசாப்தத்திற்கு முன்னர், 100% அடைபட்ட தமனிகள் கொண்ட பெரும்பாலான நோயாளிகள் மருத்துவ ரீதியாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ சிகிச்சை மேற்கொண்டனர்.

 இந்த கதீட்டர் கடுமையான புண்கள் வழியாகவோ அல்லது அடைப்பு இருக்கும் பகுதியின் பின்னாலோ பயணித்து, புண்ணைத் தாண்டி வெளியேறும். 100% அடைப்பை கடக்க உதவும்.  இரத்த நாளத்தின் இயல்பான போக்கை சீராக்க விசேஷ வயர்கள் மூலம் ஸ்டிங்ரே பலூன் பயன்படுத்தப்படுகிறது.

 

ரோடாப்ளேஷன்

என்ன, எப்படி?

ரோடாப்ளேஷன் என்பது வழக்கமான PTCA சிகிச்சை முறையுடன் கூடுதலாக செய்யப்படும் ஒரு சிகிச்சை முறை. வழக்கமான PTCA நடைமுறையில் பலூன் மற்றும் ஸ்டெண்ட்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால், கால்சியம் குவிவதால் தீவிரமான புண்களை நீக்க, அழுத்தப்பட்ட காற்றின் மூலம் இயக்கப்படும் சிறிய ட்ரில்லும் ரொடாப்ளேஷன் முறையில் பயன்படுத்தப்படுகிறது.

 

யாருக்கு?

கரோனரி தமனி நோய் இருப்பவர்களுக்கு ரொடேஷனல் கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி தனியாகவோ அல்லது பலூன் ஆஞ்சியோப்ளாஸ்டியோடு சேர்ந்தோ செய்யப்படும். கரோனரி தமனி பைபாஸ் அறுவைசிகிச்சைக்கு உள்ளாக அவர்கள் உகந்தவர்களாக இருக்க வேண்டும். 

  • கைட்வயர் மூலம் சிகிச்சை தரக்கூடிய இரத்த நாளத்தில் பெருந்தமனி குறுக்கத்துடன் தடிப்பு வியாதி இருப்போர்
  • பல்வேறு நாளங்களில் கரோனரி ஆர்டரி நோய் இருப்பவர்கள். இந்த சிகிச்சை மேற்கொண்டால் ஆபத்தில்லை என மருத்துவர் மூலம் கண்டறியப்படும் நோயாளி.
  • Certain patients who have had prior percutaneous transluminal coronary angioplasty (PTCA), and who have a restenosis of the native vessel; or,Native vessel atherosclerotic coronary artery disease that is less than 25 mm in length.
  • இதற்கு முன் percutaneous transluminal coronary angioplasty (PTCA) செய்து கொண்டவர்கள். சிகிச்சைப் பிறகும் நாளம் குறுகுபவர்கள். அல்லது, ரத்தக் குழாயில் பெருந்தமனி தடிப்புத் தமனி நோய் இருப்பவர்கள். அதன் நீளம் 25மிமீ மிகாமல் இருக்க வேண்டும்.
யார் செய்கிறார்?

டாக்டர் செங்கோட்டுவேலு ,

ஜி.எஸ். ஹார்ட் கிளினிக், தியாகராய நகர், சென்னை

 

அனுபவப் பதிவுகள் வீடியோ வடிவில் 

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

 

டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.

ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666

மருத்துவம் சார்ந்த விசாரிப்புகளுக்கு
அலைபேசி:
+91-944-522-6666

அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641