இண்ட்ராகரோனரி இமேஜிங் – IVUS, OCT
இண்ட்ராகரோனரி இமேஜிங் நுட்பங்கள்(intravascular ultrasound (IVUS) and optical coherence tomography (OCT)) are routinely கரோனரி தமனி நோய்க்கான ஆஞ்சியோகிராபியுடன் கிடைக்கப்படும் பரிசோதனை முறைகள். IVUS, OCT என இரண்டுமே நாளங்களின் பரிமாணத்தைக் கணக்கிட ஆஞ்சியோகிராபியை விட மேம்பட்ட நுட்பங்கள். இவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி (percutaneous coronary intervention (PCI)) மற்றும் ஸ்டெண்ட் பொருத்துதலுக்கு உதவுகின்றன.
ஆஞ்சியோபிளாஸ்டியின் துல்லியத்தை மேம்படுத்தி இன்ட்ராவாஸ்குலர் இமேஜிங் முறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ட்ராவாஸ்குலர் அல்ட்ராசவுண்ட் என்பது ஒரு வகை இமேஜிங் இன்ட்ராவாஸ்குலர் அல்ட்ராசவுண்ட் ஆகும். இதில் அடைப்பின் தன்மையைப் படிக்க ஒரு சிறிய கருவி பயன்படுத்தப்படுகிறது.
வழக்கமான ஆஞ்சியோகிராபி, கரோனரி தமனிகளின் உட்புறத்தின் இரு பரிமாண நிழலை மட்டுமே காண்பிக்கும். IVUS முறையோ கரோனரி தமனியை உள்ளே இருந்து வெளியே பார்க்கிறது. நிகழ்நேரத்தில் உருவாக்கப்பட்ட, தனித்துவமான கோணத்தைக் கொண்ட இப்படம் துல்லியமான தகவல்களை அளிக்கிறது.
இன்ட்ராவாஸ்குலர் இமேஜிங்கின் மற்றொரு புதுமையான முறை ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி [Optical Coherence Tomography – OCT] ஆகும். இது இன்ஃப்ராரெட் ஒளியைப் பயன்படுத்தி நல்ல தரத்தில், கரோனரியின் உட்பகுதியைப் படம்பிடிக்கிறது.
இப்புதிய இமேஜிங் தொழில்நுட்பங்கள் இரத்த ஓட்டத்தை தடுக்கும் அடைப்புகள் கடினமானதா அல்லது மென்மையானதா, கொழுப்பு அமிலங்கள் சேர்ந்ததா அல்லது கால்சியம் சேர்ந்ததா போன்ற முக்கியத் தகவல்களைத் தருகிறது. மேலும் சிகிச்சைக்கு தேவைப்படும் ஸ்டெண்டின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட உதவுகிறது. மேலும் சிகிச்சைக்குப் பின்னர் நாளத்தில் ஸ்டெண்டின் நிலையை பற்றி அறிவதற்கும் உதவுகிறது.
IVUS
என்ன?
இண்ட்ராவாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் என்பது (Intravascular ultrasound) படம்பிடிக்கும் பரிசோதனை முறை. இது விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வடிகுழாய் கொண்டு, அதன் முனையில் ஒரு சிறிய அல்ட்ராசவுண்ட் கருவி பொருத்தப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.
எப்படி?
இதய ரத்த நாளமான கரோனரி தமனியில், முனையில் கருவி அல்ட்ராசவுண்ட் கருவி பொருத்தப்பட்ட வடிகுழாய் செலுத்தப்படுகிறது. இது இரத்த நாளத்தைப் பற்றிய விரிவான தகவல்களையும், அடைப்புகளின் தன்மை குறித்தும் அறிய உதவுகிறது. அடைப்புகளை பாதுகாப்பாகவும், தீர்க்கமாகவும் நீக்கவும், பிரச்சினையை சரியாகப் புரிந்து கொள்ளவும் இம்முறை பெரிதும் உதவுகிறது.
எப்போது?
ஸ்டெண்டிங்க் போன்ற தோல்வழி ஊசித்துளை கரோனரி சிகிச்சையின்போதே பொதுவாக IVUS மேற்கொள்ளப்படும். ஸ்டெண்டிங் வைத்த பிறகு அது நிலைத்து நின்று பலன் தரவும் IVUS உதவுகிறது.
யாருக்கு?
சிக்கலான ஸ்டெண்ட் பொருத்தல் சிகிச்சையின் போதும், செயல்படாத ஸ்டெண்டுகளை ஆராயவும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது
யார் இதைக் கையாள்வார்கள்?
நாட்டில் IVUS முறையில் அதிக அனுபவம் பெற்ற முன்னோடிகளில் அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஜி செங்கோட்டுவேலு, ஒருவராவார். இமேஜிங் அண்ட் ஃபிஸியாலஜி கவுன்சில் ஆஃப் இந்தியாவை நிறுவியவர். IVUS நுட்பத்தை இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் பல்வேறு மருத்துவர்களுக்கும் இவர் கற்பித்திருக்கிறார்
OCT
என்ன?
ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி [Optical Coherence Tomography – OCT] என்பது இன்ட்ராவாஸ்குலர் இமேஜிங் முறையில் நல்ல தரத்தில் இரத்த நாளத்தையும் அதன் சுவர்களையும் படம்பிடிக்கும் ஒரு வகை; நாளத்தின் அளவு, தன்மை, வகை, அடைப்புகள் இருக்கும் விதம் ஆகியவற்றை மதிப்பிட இது உதவுகிறது.
தற்போது கரோனரி ஸ்டெண்டிங் சிகிச்சையில் ஒரு வழிகாட்டியாக இந்த பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. OCTல் இருக்கும் லூமென், நுண்ணோக்கியில் பார்ப்பதைப் போல பெரிதாகக் காட்டுவதால் ஸ்டெண்டிங் சிகிச்சை துல்லியமாக நடக்க உதவுகிறது.
எப்படி?
OCT இன்ஃப்ராரெட் ஒளியைப் பயன்படுத்தி இரத்த நாளங்களை இது படம் பிடிக்கிறது. ஒட்டுமொத்த இரத்த நாளங்களும் 3 விநாடி ஸ்கேனில் படம் பிடிக்கப்படும். ஒளியின் அலைநீளம் ஒலி அலைகளை விட குறுகியது, வேகமானது. அதனால் IVUSஐ விட OCT முறையில் படத்தின் தரம் பத்து மடங்கு சிறப்பாக இருக்கும். இன்ஃப்ராரெட் ஒளி வெளியேற்றும் வடிகுழாய் இரத்த நாளத்தில் செலுத்தப்பட்டு, சாயம் உள்ளே செலுத்தப்படும்போது படம்பிடிக்கப்படும்
யாருக்கு?
கரோனரி பெருந்தமனி தடிப்பு கட்டிகள் பற்றிய விரிவான மதிப்பீடை ஆப்டிகல் கொஹெரன்ஸ் டோமோகிராஃபி (Optical coherence tomography) பரிசோதனை கண்டறியும். மேலும் ஸ்டெண்ட் போன்ற இதயச் சுவர் சிறைக்கான இண்டர்வென்ஷனல் கருவிகள் வரும்போது இரத்த நாளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் கூறும். கரோனரி இண்டர்வென்ஷன் சிகிச்சையின் போது ஆப்டிகல் கொஹெரன்ஸ் டோமோகிராஃபியை வழி நடத்த பயன்படுத்தலாம்.
யார் இதைக் கையாள்வார்கள்?
டாக்டர் ஜி செங்கோட்டுவேலு, நாட்டில் OCT பற்றிய கருத்துருவாக்கத்தில் முக்கியமானவராக இருக்கிறார். இதில் அதிக அனுபவம் பெற்றவரும் கூட. இமேஜிங் அண்ட் ஃபிஸியாலஜி கவுன்சில் ஆஃப் இந்தியாவை நிறுவியவர். OCT நுட்பத்தை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல்வேறு மருத்துவர்களுக்குக் கற்பித்திருக்கிறார்.
மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை
டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.
ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666
அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641