Select Page

தொடர்புக்கு

எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்)
தியாகராயநகர், சென்னை 600 017.

ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:

அலைபேசி +91944 577 6666

தொலைபேசி +9144 28346666

மருத்துவம் சார்ந்த விசாரிப்புகளுக்கு

அலைபேசி +919445226666

அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற

தொலைபேசி +91442829641

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குருதிக் குழாய்ச் சீரமைப்பு / ஆஞ்சியோப்ளாஸ்டி என்றால் என்ன?

கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி பி.சி.ஐ அல்லது பி.டி.சி.ஏ என்றும் அழைக்கப்படும் இச்சிகிச்சைமுறை இதயத்தசைக்கு இரத்த விநியோகத்தை மேம்படுத்துவதன் மூலமும், குறுகலான தமனிகளை விரிவாக்குவதன் மூலமும், திறப்பதன் மூலமும் இதயநோய்க்கு சிகிச்சையளிக்க உதவும் ஒரு நோய்த்தடுப்பு செயல்முறையான இது மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கும், மார்பு வலிக்கு (ஆஞ்சினா) சிகிச்சையளிக்கவும், தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயன்படுகிறது. இருதய வடிகுழாய் ஆய்வகத்தில் (அல்லது கேத் லேப்) ஒரு சிறப்பு இன்டர்வென்ஷனல் இருதய நோய் நிபுணரால் இச்செயல்முறை செய்யப்படுகிறது.

இரத்தக் குழாய் படம் பிடித்தல்/ஆஞ்சியோகிராம் என்றால் என்ன?
ஆஞ்சியோபிளாஸ்டிக்கு முன் ஆஞ்சியோகிராம் செய்யப்படுகிறது. கவட்டு அல்லது கையில் ஒரு தமனிக்குள் ஒரு மெல்லிய பிளாஸ்டிக் குழாய் செலுத்தப்படுகிறது. கதீட்டர் எனப்படும் நீண்ட, குறுகிய குழாய் அந்த பிளாஸ்டிக் குழாயினுள் செலுத்தப்பட்டு இதயத்தைச் சுற்றியுள்ள தமனிகளுக்கு இரத்த நாளத்தை வழிநடத்தும்.சிறிய அளவு கான்ட்ராஸ்ட் திரவம் கதீட்டர் வழியாக செலுத்தப்படும். இதயத்தின் அறைகள், வால்வுகள் மற்றும் முக்கிய நாளங்கள் வழியாக இது நகரும்போது எக்ஸ்ரே மூலம் புகைப்படம் எடுக்கப்படும். தமனிகள் குறுகிவிட்டதா, இதய வால்வுகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை கண்டறிய இந்த டிஜிட்டல் படங்கள் மருத்துவர்களுக்கு உதவும்.

ஆஞ்சியோகிராம் என்றால் என்ன?
ஆஞ்சியோபிளாஸ்டிக்கு முன் ஆஞ்சியோகிராம் செய்யப்படும். இதில் ஒரு மெல்லைய குழாய் அடிவயறு அல்லது கையில் இருகும் தமனியில் செலுத்தப்படும். அந்த குழாய் வழியாக, கதீட்டர் எனப்படுகிற நீளமான, குறுகலான தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் இருக்கும் ஒரு டியூப் இதயத்தைச் சுற்றியுள்ள தமனிகளுக்குப் போகும் இரத்தக் நாளங்கள் வரை செலுத்தப்படும். காண்ட்ராஸ்ட் லிக்வீட் என்கிற திரவம் சிறிய அளவு அந்த கத்தீட்டரில் செலுத்தப்பட்டு, இதய அறைகள், வால்வுகள், முக்கியமான நாளங்கள் என அது போகும் பாதை எக்ஸ்ரே உதவியுடன் படம்பிடிக்கப்படும். இதை வைத்து, கரோனரி தமனிகள் குறுகியுள்ளதா இல்லையா, இதய வால்வுகள் ஒழுங்காகச் செயல்படுகின்றதா இல்லையா என்பதை மருத்துவர்கள் கண்டுபிடிப்பார்கள்.
இண்டர்வேஸ்குலர் இமேஜிங் என்றால் என்ன?

ஆஞ்சியோபிளாஸ்டியின் துல்லியத்தை மேம்படுத்தி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது இன்ட்ராவாஸ்குலர் இமேஜிங் முறை. இன்ட்ராவாஸ்குலர் அல்ட்ராசவுண்ட் என்பது ஒரு வகையான இமேஜிங் இன்ட்ராவாஸ்குலர் அல்ட்ராசவுண்ட் ஆகும். இதில் அடைப்பின் தன்மையைப் படிக்க ஒரு சிறிய கருவி பயன்படுத்தப்படுகிறது.

வழக்கமான ஆஞ்சியோகிராபி, கரோனரி தமனிகளின் உட்புறத்தின் இரு பரிமாண நிழலை மட்டுமே காண்பிக்கும். IVUS முறையோ கரோனரி தமனியை உள்ளே இருந்து வெளியே பார்க்கிறது. நிகழ்நேரத்தில் உருவாக்கப்பட்ட, தனித்துவமான கோணத்தைக் கொண்ட இப்படம் துல்லியமான தகவல்களை அளிக்கிறது.

இன்ட்ராவாஸ்குலர் இமேஜிங்கின் மற்றொரு புதுமையான செய்முறையே ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி [Optical Coherence Tomography – OCT] ஆகும். இன்ஃப்ராரெட் ஒளியைப் பயன்படுத்தி நல்ல தரத்தில், கரோனரியின் உட்பகுதியை இது படம்பிடிக்கிறது.

இந்த புதிய இமேஜிங் தொழில்நுட்பங்கள், இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் அடைப்புகள் கடினமாக உள்ளதா அல்லது மென்மையானதா, கொழுப்பு அமிலங்களால் சேர்ந்ததா அல்லது கால்சியத்தால் சேர்ந்ததா என முக்கியமான தகவல்களைத் தருகிறது. சிகிச்சைக்குத் தேவைபடும் ஸ்டெண்டின் அளவை துல்லியமாகக் கணக்கிட உதவுகிறது. மேலும் சிகிச்சைக்குப்பின் நாளத்தில் ஸ்டெண்டின் நிலையை அறியவும் உதவுகிறது.

TAVR என்றால் என்ன?
TMVR என்றால் என்ன?
The மிட்ரல் வால்வு மிகவும் சிக்கலான கட்டமைப்பாகும். இதன் திறனும், செயல்பாடும் கூறுபாகங்களின் ஒழுங்கான செயல்பாட்டைச் சார்ந்துள்ளது.
IVUS என்றால் என்ன?
இன்ட்ராவாஸ்குலர் அல்ட்ராசவுண்ட் (Intravascular ultrasound – IVUS) ) or அல்லது இன்ட்ராவாஸ்குலர் எக்கோ கார்டியோகிராஃபி (intravascular echocardiography) என்பது அல்ட்ராசவுண்ட் அலைகளைப் பயன்படுத்தி இதயச் செயல்பாட்டைக் கணக்கெடுக்கும் எக்கோகார்டியோகிராஃபி மற்றும் இருதய வடிகுழாய் என்கிற கதீடர் என இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் ஒரு சிகிச்சைமுறையாகும்.
OCT என்றால் என்ன?

கரோனரியில் சிகிச்சைக்கான வழிகாட்டியாக ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி (Optical coherence tomography – OCT) பயன்படுத்தப்படுகிறது. ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி என்பது உடலில் துளையிட்டு கரோனரி பகுதிகளை நல்ல தரத்தில் படம்பிடிக்கும் ஒரு பரிசோதனையாகும். OCTஎன்பது  உடற்கூறியல் பார்வையிலிருந்து  கரோனரி நாளங்களை மதிப்பீடு செய்யும் ஒரு மேம்பட்ட முறையாகும்.

FRR என்றால் என்ன?

ஃப்ராக்ஷனல் ஃப்ளோ ரிசர்வ் , or FFR,

) அல்லது FRR என்பது வழிகாட்டி கம்பி அடிப்படையிலான செயல்முறையாகும், இது குறிப்பிட்ட கரோனரி தமனி பகுதியில் இரத்த அழுத்தத்தையும், ஓட்டத்தையும் துல்லியமாக அளவிட உதவுகிறது. கரோனரி ஆஞ்சியோகிராம் செய்யும்போதே, வழக்கமாக பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படும் வடிகுழாய் (கதீடர்) மூலம் FFR செய்யப்படுகிறது.

 

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

 

டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.

ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666

மருத்துவம் சார்ந்த விசாரிப்புகளுக்கு
அலைபேசி:
+91-944-522-6666

அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641