Select Page

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

previous arrow
next arrow
Slider

மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு

மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு அவர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூத்த ஆலோசகர் மற்றும் தலைமை இருதய நோய் சிகிச்சை நிபுணராகப் பணிபுரிந்துவருகிறார். மிகவும் சவாலான பிசிஐ மற்றும் ஸ்டெண்டிங் சிகிச்சையைக் கையாள்வதில் கைதேர்ந்தவரான இவர் தோல்வழி இதய வால்வு மாற்று மற்றும் அறுவை சிகிச்சையிலும் (TAVI/TAVR, mitraclip போன்றவை) அனுபவமிக்கவர். இவர் தற்போது சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள டாக்டர் ஜி.எஸ். இதய மருத்துவமனையிலும் (Dr G.S. Heart Clinic) ஆலோசனை வழங்கிவருகிறார்.

மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளுக்காக புகழ்பெற்ற Eurointervention, Journal of the American College of Cardiology, Indian Heart Journal, Heart, Lung and Circulation – Journal, Asia Intervention, Cath Lab Digest, International Journal of Cardiology போன்ற மருத்துவ சஞ்சிகைளில் மருத்துவம் சார்ந்த மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

புகழ்பெற்ற மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற இவர் அதனைத் தொடர்ந்து மணிபாலில் அமைந்துள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் Internal Medicine பட்டத்தையும், அதன் பின் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் இருதயவியல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.

மேலும் ஃப்ரான்ஸ் கல்வி நிறுவனமான கார்டியோவாஸ்குலேர் பாரிஸ் சுட்டில், உலகப் புகழ்பெற்ற மருத்துவரான மேரி கிளாட் மோரிஸ் மேற்பார்வையில் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி ஃபெலோஷிப்பை மேற்கொண்டார்.
சிக்கலான கரோனரி ஸ்டென்டிங் மற்றும் ஸ்டரக்சரல் இதய வால்வு சிகிச்சைகளில் தனது பங்களிப்புக்காக அங்கீகாரம் பெற்றுள்ளவர். கேத்லாபில் 15,000க்கும் மேற்பட்ட முறை சிகிச்சைகள் செய்துள்ளார்.

நிபுணத்துவம் பெற்றுள்ள சிகிச்சை முறைகள்

மருத்துவர் ஜி செங்கோட்டுவேலு , இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி சிகிச்சை முறையில், குறிப்பாக பெரியவர்களுக்கான இதயச் சுவர் வழி மற்றும் வால்வு வழி சிகிச்சையில் அதிக நிபுணத்துவம் பெற்றவர். வால்வு வழி சிகிச்சைகளில் ட்ரான்ஸ்கதீட்டர் பெருநாடி வால்வு மாற்று சிகிச்சை, ட்ரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு மாற்று சிகிச்சை, ட்ரான்ஸ்கதீட்டர் நுரையீரல் வால்வு மாற்று சிகிச்சை, ட்ரான்ஸ்கதீட்டர் முக்கூர் வால்வு மாற்று சிகிச்சை ஆகியவை அடங்கும்.

மேலும் மணிக்கட்டு தோல்வழி இரத்தக் குழாய் பரிசோதனை, சிக்கலான குருதிக்குழாய்ச் சீரமைப்பு மற்றும் ஸ்டெண்ட் அமைப்பு, குறைந்தபட்ச துளையிடுதலுடன் செய்யப்படும் பரிசோதனை, சிகிச்சைகள், மாரடைப்புக்கான ஆஞ்சியோப்ளாஸ்டி, பைபாஸுக்கு பிறகான ஆஞ்சியோ, Flextrome Distal Protection Systems, Drug Eluting Balloons (DEB), Atherectomy, Rotablation, Optical Coherence Tomography (OCT) imaging, Bioresorbable Vascular Scaffold (BVS), Intravascular Ultrasound (IVUS) Fractional Flow Reserve (FFR) உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சிகிச்சை.

நிபுணத்துவம் பெற்றுள்ள சிகிச்சை முறைகள்

மருத்துவர் ஜி செங்கோட்டுவேலு , இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி சிகிச்சை முறையில், குறிப்பாக பெரியவர்களுக்கான இதயச் சுவர் வழி மற்றும் வால்வு வழி சிகிச்சையில் அதிக நிபுணத்துவம் பெற்றவர். வால்வு வழி சிகிச்சைகளில் ட்ரான்ஸ்கதீட்டர் பெருநாடி வால்வு மாற்று சிகிச்சை, ட்ரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு மாற்று சிகிச்சை, ட்ரான்ஸ்கதீட்டர் நுரையீரல் வால்வு மாற்று சிகிச்சை, ட்ரான்ஸ்கதீட்டர் முக்கூர் வால்வு மாற்று சிகிச்சை ஆகியவை அடங்கும்.

மேலும் மணிக்கட்டு தோல்வழி இரத்தக் குழாய் பரிசோதனை, சிக்கலான குருதிக்குழாய்ச் சீரமைப்பு மற்றும் ஸ்டெண்ட் அமைப்பு, குறைந்தபட்ச துளையிடுதலுடன் செய்யப்படும் பரிசோதனை, சிகிச்சைகள், மாரடைப்புக்கான ஆஞ்சியோப்ளாஸ்டி, பைபாஸுக்கு பிறகான ஆஞ்சியோ, Flextrome Distal Protection Systems, Drug Eluting Balloons (DEB), Atherectomy, Rotablation, Optical Coherence Tomography (OCT) imaging, Bioresorbable Vascular Scaffold (BVS), Intravascular Ultrasound (IVUS) Fractional Flow Reserve (FFR) உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சிகிச்சை.

முதல் முறையாக தென்/மத்திய இந்தியாவில் Opticross Intravascular Ultrasound Systems IVUS பயன்படுத்தியவர்

முதல் முறையாக இந்தியாவில் Absorb Bioabsorbable Vascular Scaffold பயன்படுத்தியவர் (டிசம்பர் 2012)

இந்திய tapering Meres BRS scaffold முதலில் பயன்படுத்தியவர்

முதல்முறையாக தென்னிந்தியாவில் Optis Optical Coherence Tomography systems பயன்படுத்தியவர்

முதல் முறையாக தென்னிந்தியாவில் Minvasys Dedicated Bifurcation stent system பயன்படுத்தியவர்

முதல் முறையாக தென்னிந்தியாவில் தீவிர மாரடைப்புக்கான ப்ரைமரி ஆஞ்சியோபிளாஸ்டியில் Clearway catheter பயன்படுத்தியவர்

முதல் முறையாக சென்னையில் M guard Stent தொழில்நுட்பம் பயன்படுத்தியவர்

தமிழ்நாட்டில் 2015ல், பெருநாடி வால்வு சுருக்கத்துக்காக, ட்ரான்ஸ்கத்தீட்டர் பெருநாடி வால்வு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திக்காட்டியதில் டாக்டர் ஜி செங்கோட்டுவேலு தான் முதல் நபர்.

இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த அப்பல்லோ மருத்துவமனைகளில், மருத்துவர் செங்கோட்டுவேலு மற்றும் அணியினர் தான் 2015ல், முதல்முறையாக TAVR முறையைச் செய்தது. மேலும் சென்னை, பெங்களூரு, மதுரை அப்பல்லோ மருத்துவமனைகளை TAVR முறையை முதன் முதலில் செய்ததும் இவரே.

ஜனவரி 2018ல், அப்பல்லோ குழும மருத்துவமனைகளுக்காக முதல் முறையாக நேரடி செயல் விளக்கத்தைச் செய்து காட்டியுள்ளார். தொடர்ந்து பல்வேறு கூட்டங்களில் நேரடி செயல் விளக்கங்கள் செய்து காட்டியுள்ளார்.

முதல்முறையாக, இந்தியாவில் Bicuspid பெருந்தமனி குறுக்கத்துக்காக Evolut R செய்தவர்

முதல்முறையாக இந்தியாவில், வால்வு மாற்று அறுவை சிகிச்சை பெற்ற நோயாளிகள் அடுத்த நாளே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

முதல்முறையாக தென்னிந்தியாவில் Sapien 3 வால்வு பொருத்தியவர்

முதல்முறையாக தென்னிந்தியாவில் Evolut PRO Valve பொருத்தியவர்

முதல்முறையாக இந்தியாவில், சிறிய இதய வளைவு இருக்கும் நோயாளிக்கு 20 மில்லிமீட்டர் அளவு Sapien 3 வால்வு பொருத்தியவர்

முதல்முறையாக இந்தியாவில், Bicuspid பெருந்தமனி குறுக்கத்துக்காக Evolut Pro Valve TAVR சிகிச்சை கொடுத்தவர்

முதல்முறையாக இந்தியாவில், கரோடிட் மற்றும் கரோனரி உதவியுடன், அதிக ஆபத்திருக்கும் நோயாளிக்கு, TAVI சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியவர்

முதல்முறையாக இந்தியாவில், கரோடிட் மற்றும் கரோனரி உதவியுடன், அதிக ஆபத்திருக்கும் நோயாளிக்கு, TAVI சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியவர்

இந்தியாவிலேயே வயதான, அதிக நோயாபத்து இருந்த 91 வயது முதியவருக்கு வெற்றிகரமாக TAVR சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே, சென்னையில் தான் வியாபாரத்துக்கான முதல் Myval உருவாக்கப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகையான வால்வுகளைக் கொண்டு சிகிச்சை செய்த இந்தியாவின் வெகு சில மருத்துவர்களில் மருத்துவர் செங்கோட்டுவேலுவும் ஒருவர். அந்த வால்வுகள் – Medtronic- Core valve, Evolut R, Evolut Pro, Edwards- Sapien 3, Meril – MyVal. மேலும் பல இதய சிகிச்சை மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சியளித்துவருகிறார்

நிபுணத்துவம் பெற்றுள்ள சிகிச்சை முறைகள்

ட்ரான்ஸ்கதீட்டர் பெருநாடி வால்வு மாற்று சிகிச்சை

ட்ரான்ஸ்கத்தீட்டர் பெருநாடி வால்வு மாற்று சிகிச்சை என்பது சரியாக திறக்கத் தவறிய ஒரு குறுகிய பெருநாடி வால்வை மாற்றுவதற்கான சிகிச்சை முறையாகும். இது குறித்து

 

ட்ரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு மாற்று சிகிச்சை

ட்ரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு மாற்றுதல் என்பது வழக்கமான இதய அறுவை சிகிச்சையின் தேவை இல்லாமல் இதயத்தில் உள்ள மிட்ரல் வால்வை மாற்றுவதற்கான ஒரு வழியாகும். 

 

ட்ரில் மூலமாக இரத்தக் குழாய் அடைப்பு நீக்கம்

ரோடாப்ளேஷன் என்பது வைரம் பூசப்பட்ட முனையுடன் இருக்கும் சிறிய ட்ரில் ஆகும். காற்றழுத்ததின் மூலம் கரோனரி தமனியில் கால்சியத் -தால் சேர்ந்த அடைப்பைஉடைக்க இது பயன்படுத்தப்-படுகிறது.

இரத்தக் குழாய்கள் பரிசோதனை

 

ஃப்ராக்ஷனல் ஃப்ளோ ரிசர்வ் (FFR) தொழில்நுட்பம் இருதய நோயாளிக்கு ஸ்டென்ட் அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை தேவையா அல்லது மருந்துகளால் அவரை குணப்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

குருதிக்குழாய்ச் சீரமைப்பு

 

குருதிக்குழாய்ச்
சீரமைப்பு 
என்பது
கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி
பி.சி.ஐ அல்லது பி.டி.சி.ஏ என்றும் அழைக்கப்படுகிறது. இது குறைந்தபட்ச துளையிடுதல் மூலம் நடக்கும் அறுவைசிகிச்சையாகும்.

இரத்தக் குழாய் படம் பிடித்தல்

 

இண்ட்ராகரோனரி இமேஜிங் நுட்பங்கள் கரோனரி தமனி நோய்க்கான ஆஞ்சியோகிராபியுடன் கிடைக்கப்படும் பரிசோதனை முறைகளில்
குறிப்பிடத்தக்கது.

 

 

குறுகிய தமனிக்கான சிகிச்சை

பயோரெசர்பபிள் வாஸ்குலர் ஸ்கேஃபோல்ட் (பி.வி.எஸ்) என்பது ஒரு உலோகமல்லாத கண்ணி குழாய் ஆகும்.
இது குறுகிய தமனியை சரியாக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.  

மிட்ராக்ளிப்

 

மிட்ராக்லிப் என்பது மிட்ரல் வால்வு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். பாதிக்கப்பட்ட மிட்ரல் வால்வு சிகிச்சைக்க்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் இது. 

மணிக்கட்டு தோல்வழி இரத்தக் குழாய் பரிசோதனை

கரோனரி மற்றும் புற ஆஞ்சியோகிராம் செய்வதற்கான ஒரு பயனுள்ள, குறைந்த அளவு துளையிட்டு மேற்கொள்ளும் பரிசோதனையே டிரான்ஸ்ரேடியல் நுட்பம் ஆகும்

இந்தியாவின் ராகுல் டிராவிட் – டாக்டர் கார்த்திக், பெங்களூரு 2018

மாயாஜாலக் கைகள் இருக்கும் இதய நோய் மருத்துவர் – திரு. பரேக், சிகிச்சை பெற்றவர்

“இந்தியாவின் அண்டோனியோ கொலம்போ” – டாக்டர் ஸ்ரீபால் பெங்களூரு , அமெரிக்கா 2016

 

எங்களைப் பொருத்தவரை அவருக்க் தெய்வீக சக்தி உள்ளது – ஷ்ரேயா சிகிச்சை பெற்றவர்,

 

மிகத் திறமையான கைகள் – டாக்டர் மார்க் சில்வஸ்ட்ரி, ஃபிரான்ஸ்

“கடுமையான அயோர்டிக் ஸ்டெனோசிஸ் மற்றும் சிஓபிடிக்கு மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய கடுமையான மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்தது. பல அறுவை சிகிச்சை நிபுணர்கள் திறந்த இதய அறுவை சிகிச்சையை மறுத்துவிட்டனர். நான் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்த நிலையில், பிப்ரவரி 11, 2016 அன்று டாக்டர் செங்கோட்டுவேலுவினால் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவரது நிபுணத்துவம் வாய்ந்த டி.ஏ.வி.ஆர் சிகிச்சை மூலம் நான் தற்போது இளமையாகவும், மகிழ்ச்சியாகவும், வலிமையாகவும் உணர்ந்தேன். எல்லாவற்றிற்கும் நன்றி. ”

 

ராமநாதன் என்

– சிகிச்சை பெற்றவர்

“டாக்டர் செங்கோட்டுவேலு மிகவும் கனிவானவர். நமது பிரச்சனையை பொறுமையுடனும் தனிப்பட்ட அக்கறையுடனும் கேட்டு அணுகக் கூடியவர். அவர் மிகவும் அறிவாளி மற்றும் எளிமையானவர்.. அவரிடம் நாம் சிகிச்சை எடுத்து கொள்ளும் போது பாதுகாப்பான அரவணைப்பில் நாம் இருக்கிறோம் என்பதை உறுதியாக நம்பலாம்”

அஸ்வினி உமா சங்கர்

– சிகிச்சை பெற்றவர்

“டாக்டர் ஜி.எஸ்ஸின் எளிமை மற்றும் உறுதியளிக்கும் அணுகுமுறையை நான் பெரிதும் விரும்பினேன். ஒரு உயர்தர இருதய சிகிச்சை மையத்தில் இருக்க வேண்டிய அனைத்து நவீன வசதிகளும் உபகரணங்களும் இவரது க்ளீனிக்கில் உள்ளன. இங்கு பண்புரிபவர்கள் மரியாதைக்குரியவர்களாகவும், பெரும் ஒத்துழைப்புடன் துரிதமாக பதிலளிக்க கூடியவர்களாகவும் உள்ளனர். டாக்டர் ஜி.எஸ் நோயாளிகளை கையாளும் முறை, நோயாளியை சார்ந்தும், நடைமுறைக்கு சாத்தியமானதாகவும், சவுகரியமானதாகவும் வசதியானதாகவும் உள்ளது “

ராதாகிருஷ்ணா பிரசாத் சி

– சிகிச்சை பெற்றவர்

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

 

டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.

ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666

மருத்துவம் சார்ந்த விசாரிப்புகளுக்கு
அலைபேசி:
+91-944-522-6666

அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641